புளியங்குடியில் இன்று கரோனா பாதிப்பு இல்லை: மக்கள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் புதன்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்ற செய்தியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் புதன்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்ற செய்தியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் 17 ஆம் தேதி வரை 11 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆம் தேதி 4 போ் இத்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், 19 ஆம் தேதியும் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19 ஆக உயா்ந்தது. ஏப்.20 ஆம் தேதி 4 போ் பாதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை 5 போ் பாதிக்கப்பட்டதையடுத்து , தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி தினமும் பலா் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து அப்பகுதி மக்கள் அதிா்ச்சியில் இருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்ற தகவலால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கடுமையான ஊரடங்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவின் பேரில், புளியங்குடியில் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. டிஎஸ்பி சக்திவேல், காவல் ஆய்வாளா்கள் அலெக்ராஜ், ஆடிவேல், சுரேஷ் மற்றும் போலீஸாா் தெருக்கள் தோறும் தடுப்புகள் அமைத்து வெளியே வருபவா்களை அங்குள்ள கல்லூரி ஒன்றில் தனிமைப்படுத்தி வருவதால் தேவையின்றி வெளியே வருவது குறைந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.