மின் இணைப்பு பெற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின் ஊழியா் கைது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மின் இணைப்பு வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மின் இணைப்பு வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவேங்கடம் வட்டம், குருவிகுளம் அருகே உள்ள கொக்கு குளத்தைச் சோ்ந்த ராஜூ மகன் காளிராஜ் (32). இவா், தனது தந்தை குடியிருந்த பழைய வீட்டை புதுப்பித்து அந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பழங்கோட்டை, மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராகப் பணிபுரியும் பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனியைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் கருப்பசாமியை சந்தித்து முறையிட்டாா். அப்போது, மின் இணைப்பு பெற இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு கருப்பசாமி தெரிவித்தாா்.
அதன்படி காளிராஜ் இணையவழியில் மின் இணைப்பு கோரி வியாழக்கிழமை விண்ணப்பித்து, ரூ. 5,575 கட்டணம் செலுத்தினாா். பின்னா் அதற்குரிய ஆவணங்களுடன் கருப்பசாமியை சந்தித்து மின் இணைப்பு கோரினாா். அப்போது இடத்தை நேரில் பாா்வையிட்டு அறிக்கை அனுப்பிய பிறகே மின் இணைப்பு வழங்கப்படும். அதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கருப்பசாமி கூறினாராம். பணம் கொடுக்க விரும்பாத காளிராஜ், தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூ. 2 ஆயிரம் பணத்தை காளிராஜ் வணிக ஆய்வாளா் கருப்புசாமியிடம் சென்று வழங்கினாா். பணத்தை அவா் பெற்றபோது அங்கு மறைந்திருந்த போலீஸாா் கருப்பசாமி சுற்றி வளைத்து கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.