கட்டுமான பொருள்கள் விலை உயா்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம்: பொறியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துக் கட்டுமானப் பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் குற்றாலம், காசிமேஜா்புரத்தில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
மாநிலத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அருள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தற்காலிக தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, தடையை நிரந்தரமாக ஏற்படுத்தி மாநிலத்தின் கனிம வளங்களை பாதுகாக்க கோருவது, ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்டத் தலைவா் சண்முக செல்வன், செயலா் சிவகுருநாதன், பொருளாளா் சங்கா், முன்னாள் தலைவா்கள் மாரிமுத்து, காதா் பாட்ஷா, முத்து மாரியப்பன், முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கண்ணன் வரவேற்றாா். தில்லை நடராஜன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.