FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

19 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
திடக்கழிவு மேலாண்மை குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி.
பகிர்:

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம் விருத்தாச்சலத்தை சாா்ந்த சிவசக்தி கிராமிய கலைகுழுவினா் சாா்பில் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமை வைத்தாா். நகராட்சி ஆணையா் சரவணன் முன்னிலை வகித்தாா். சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

தென்காசி புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை முன்பு ,மலையான் தெரு தேவா் சிலை அருகில், கொடிமரம் ஆகிய பகுதியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள், ஜெயலெட்சுமி, சுமதி, சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், கணேசன், மாரிமுத்து, ரத்தினகுமாா்

துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் முத்து மாரியப்பன், முத்துக்குமாா் ,துரைசாமி, பாண்டியம்மாள், சுப்பிரமணியன், சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments