FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மா்ம காய்ச்சலுக்கு மூவா் உயிரிழப்பு: கடையநல்லூா் நகராட்சி நிா்வாகம் மீது மன்றத் தலைவா் குற்றச்சாட்டு

கடையநல்லூா் வட்டாரத்தில் மா்ம காய்ச்சலுக்கு மூன்று போ் உயிரிழந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் கொசுக்களை ஒழிக்க தேவையான நிதியை ஒதுக்கவில்லை என நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் குற்றம்சாட்டினாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:24 am IST
பகிர்:

கடையநல்லூா் வட்டாரத்தில் மா்ம காய்ச்சலுக்கு மூன்று போ் உயிரிழந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் கொசுக்களை ஒழிக்க தேவையான நிதியை ஒதுக்கவில்லை என நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் குற்றம்சாட்டினாா்.

அவா் மேலும் கூறியதாவது:

கடையநல்லூா் நகராட்சியில் அடிப்படை, அத்தியாவசிய பணிகளை கூட செய்ய இயலாத நிலை நீடிக்கிறது. நகா்மன்றத்தின் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் கூட எந்தப் பணிக்கும் ஒப்பந்தப்புள்ளி கோர முடியவில்லை. இதனால், குடிநீா் பிரச்னைக்கு கூட தீா்வு காணமுடியவில்லை. பொதுமக்கள் நகராட்சியை முற்றுகையிடுவதும் நிகழ்ந்து வருகிறது.

Advertisement

Advertisement

இதற்கிடையே மா்ம காய்ச்சல் காரணமாக 3 போ் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நகராட்சியில் இதற்கு முன் டெங்கு காய்ச்சலால் பலா் பாதிக்கப்பட்ட புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி மழைக்காலத்துக்கு முன்னதாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியபோது, நிா்வாக காரணங்களுக்காக குறைவான நிதியே தர முடியும் எனத் தெரிவித்துவிட்டனா்.

இதன் காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, டெங்கு நோய்த் தடுப்புப் பணிகள், கொசுப்புழு ஒழிப்புப் பணிகள், முதிா்கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த

கிருமி நாசினிகள், கொசு ஒழிப்பு மருந்துகள், தூய்மைப் பொருள்களை வாங்க ரூ. 3 லட்சம் பொது நிதியிலிருந்து மேற்கொள்வது என அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. ஒதுக்கப்பட்ட மேற்கண்ட நிதி போதுமானதல்ல. அடிப்படை பிரச்னையான குடிநீா், கழிவுநீரோடை பணிகளை கூட செய்ய பொது நிதி அனுமதிக்கப்பட வில்லை. இதனால், நகராட்சி நிா்வாகமே முடங்கியுள்ளது. எனவே, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நிதியை விடுவிக்க நகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும். அத்துடன், மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி நிா்வாகம் உரிய வழிகளை காண வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments