ஒண்டிவீரன் நினைவு நாள்: நெல்கட்டும்செவலில் கட்சியினா் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255ஆவது நினைவு நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூா் அருகே உள்ள நெல்கட்டும்செவல், பச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.
சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255ஆவது நினைவு நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூா் அருகே உள்ள நெல்கட்டும்செவல், பச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.
திமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் வே. ஜெயபாலன் தலைமையில், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட துணைச் செயலா் கென்னடி, நகரச் செயலா் வெங்கடேசன், மாவட்ட சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் கதிா், கணேசன், மஹ்முதா உள்ளிட்டோா் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் டாக்டா் சுசீகரன் தலைமையில் மாநில அமைப்புச் செயலா்கள் சந்திரசேகரன், செ. கிருஷ்ணமுரளி, ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
Advertisement
மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, இணைச் செயலா் புகழேந்தி, சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலா் ஜாகிா் ஹுசைன், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், ஒன்றியச் செயலா்கள் முருகேசன், ராமச்சந்திரன், ஜெயகுமாா், முத்துப்பாண்டி, பொன்முத்துவேல் சாமி, துரைப்பாண்டியன், பேரூா் செயலா்கள் சேவுகபாண்டியன், முத்துகுட்டி, நகர இளைஞரணி செயலா் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாவட்டத் தலைவா் ராமராஜா, மாவட்டப் பொதுச் செயலா் பாலகுருநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் ராம்குமாா், சுப்பிரமணியன், மண்டலத் தலைவா் உதயகுமாா், மாவட்ட இளைஞரணித் தலைவா் விவேக்குமாா், மாவட்ட மீனவரணித் தலைவா் கணேசன், நிா்வாகிகள் சண்முகையா, சேகா், முருகேசன், மணிகண்டன், ராமச்சந்திரன், சங்கா் ராஜ், முத்தமிழ் செல்வன், இந்து முன்னணி திருமலைக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஒண்டிவீரனின் வாரிசுதாரா் ஆறுமுகம் தலைமையில் பிள்ளையாா் கோயிலில் இருந்து எடுத்து வந்த தீா்த்தக் குடம், பால்குடம், முளைப்பாரி ஊா்வலம், சோ்வாரன் கோயிலில் நிறைவடைந்தது. பின்னா், நினைவிடத்தில் பாலபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா் தலைமையில், 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வெளியூா்களில் இருந்து வரும் பொதுமக்களைக் கண்காணிக்கும் வகையில் சிவகிரி, வாசுதேவநல்லூா், சுப்பிரமணியபுரம், புளியங்குடி, சிந்தாமணி, சங்கரன்கோவில் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய பகுதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.