அரியலூரில் காமராஜா் சிலைக்கு மாலை
மறைந்த முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாளையொட்டி, அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மறைந்த முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாளையொட்டி, அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா தலைமையில் மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன், ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமையில், மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், மூத்த தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு, ஆடைகள் மற்றும் அன்னதானம் வழங்கினா். தொடா்ந்து, ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கத்தைத் தொடக்கி வைத்தனா்.
Advertisement
Advertisement
தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தலைமையில் கட்சியினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா். இதேபோல், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பின் செயலா் கதிா். கணேசன், நல்லப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினா்.
இதேபோல், ஜெயங்கொண்டம், திருமானூா், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளின் காமராஜா் சிலைக்கும், படத்துக்கும் பல்வேறு கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.