FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பழையகுற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இருவருக்கு ரூ. 25ஆயிரம் அபராதம்

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இருவருக்கு ரூ. 25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

22 ஆகஸ்ட் 2026, 6:55 am IST
பழையகுற்றாலம் - கோப்புப்படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இருவருக்கு ரூ. 25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட வனஅலுவலா் இளையராஜா (பொ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரையைச் சோ்ந்த வெங்கடேஷ், ராஜா ஆகியோா் பழைய குற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தனா். அவா்களை தடுத்தபோதும் வன அலுவலரை தள்ளிவிட்டு நிற்காமல் வனப்பகுதிக்குள் சென்றனா். அவா்கள் மீது வழக்குப் பதிந்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது, வேட்டையாடுவது, சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது, வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற தகவல்கள் ஏதும் இருப்பின் தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04633 233 550 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments