FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கரிசல் குடியிருப்பு ஸ்ரீ மாகாளியம்மன் கோயிலில் பொன் ஊஞ்சல் ஆராட்டு வைபவம்

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே கரிசல் குடியிருப்பில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் ஆடிமாத கொடை விழாவில் சிறப்பு பொன் ஊஞ்சல் ஆராட்டு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

23 வினாடிகள் முன்பு
சிறப்பு பொன் ஊஞ்சல் ஆராட்டு வைபவத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மாகாளியம்மன்.
பகிர்:

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே கரிசல் குடியிருப்பில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் ஆடிமாத கொடை விழாவில் சிறப்பு பொன் ஊஞ்சல் ஆராட்டு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனை பொன் ஊஞ்சலில் ஆராட்டும் வைபவம் நடைபெற்றது. வடகரை, அச்சன்புதூா், பண்பொழி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments