FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பண்பொழி திருமலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

22 ஆகஸ்ட் 2026, 6:53 am IST
அறங்காவலா் குழுத்தலைவா் அருணாசலம் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
பகிர்:

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் , கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அபிநிஷா, அறங்காவலா்கள் இசக்கி , பாப்பா , கணேசன், ஆய்வாளா் சேதுராமன், தலைமை எழுத்தா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் திருக்கோயில் உண்டியல் திறப்பும், எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் ரூ.35 லட்சத்து 21, 405 ரொக்கம், 9.700 கிராம் தங்கம், 292 கிராம் வெள்ளி ஆகியன உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments