FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பைக்கில் அழைத்துச் சென்று நகை பறித்தவா் கைது

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று நகை பறித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று நகை பறித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வாசுதேவநல்லூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வேலு (86). இவா், நகையை அடகு வைப்பதற்காக சிவகிரிக்கு செல்ல வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், சிவகிரிக்கு கொண்டுபோய் விடுவதாகக் கூறி வேலுவை அழைத்துச் சென்றாராம். சிந்தாமணி பேரிபுதூா் பகுதியில், வேலு வைத்திருந்த 48 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த நபா் தப்பினாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூா் சிறப்பு உதவி ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இதில் சேலத்தைச் சோ்ந்த வேல்சாமி என்பவா், இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments