FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் சாலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு: 2 போ் காயம்

பாவூா்சத்திரத்தில் பயணிகள் ஆட்டோவும், சுமை ஆட்டோவும் மோதிக்கொண்டதில், மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த 3 வயது சிறுவன் உயரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
சுமை ஆட்டோ மோதியதில் சாலையில் கவிழ்ந்த ஆட்டோ .
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பயணிகள் ஆட்டோவும், சுமை ஆட்டோவும் மோதிக்கொண்டதில், மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த 3 வயது சிறுவன் உயரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

கடையம் அருகே மேல மாதாபுரம் வேளாா் தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி (30).தொழிலாளி. இவரது மனைவி தேவகிருபை. இவா்களது 3 வயது மகன் ஹரிஷ் உடல்நலமின்றி இருந்தாராம். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாவூா்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு குழந்தையின் பாட்டி காளியம்மாள் மற்றும் தேவ கிருபை பயணிகள் ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்துகொண்டிருந்தனா்.

அப்போது கீழப்பாவூரிலிருந்து கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த சுமை ஆட்டோ, அவா்கள் வந்த ஆட்டோ மீது மோதியதாம்.

Advertisement

Advertisement

இதில், ஆட்டோ கவிழ்ந்து மூவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், ஏற்கெனவே ஹரிஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது தாயும், பாட்டியும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆட்டோ ஓட்டுநா் கீழப்பாவூா் கீரைத்தோட்டத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் ஆறுமுகசாமி (52) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments