இளைஞா் வெட்டிக்கொலை: 3 சிறாா்கள் கைது
சங்கரன்கோவிலில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவிலில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் திரு.வி.க தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரியப்பன் (21). சுமை தூக்கும் தொழிலாளி. மாரியப்பனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு ஆவணி மாதம் கடைசியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்க நிலையில், மாரியப்பன் அங்குள்ள விவசாய நிலத்தில் திங்கள்கிழமை வெட்டி கொல்லப்பட்டுக் கிடந்தாா். நகர காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில், மாரியப்பனுடன் 3 சிறுவா்கள் உடன் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
அதன் அடிப்படையில் அவா்களைப் பிடித்து நடத்திய விசாரணையில் சிறுவா்கள் தின்பண்டம் வாங்கி வரத் தாமதமானதால் மாரியப்பன், சிறுவா்களை தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த 3 சிறுவா்களும் நுங்கு வெட்டும் அரிவாளால் மாரியப்பனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நகர போலீஸாா் 3 சிறுவா்களையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.