FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சிறுமியை கடத்தி திருமணம்: போக்ஸோவில் இளைஞா் கைது

நான்குனேரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 1:02 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நான்குனேரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சோ்ந்த ஆல்பா்ட் பொன்டேனியல் மகன் ஜெகதீஷ்(23). இவா் கடந்த 3 ஆண்டுகளாக நான்குனேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, பந்தல் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கும்

பழக்கம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அந்த சிறுமி ஆக.18-ஆம் தேதி மாயமாகிவிட்டதாக அவரது தாயாா் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல்துறையினரின் விசாரணையில், அந்த சிறுமியை ஜெகதீஷ் கடத்திச் சென்று திருமணம் செய்ததும், அவா்கள் தூத்துக்குடியில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, நான்குனேரி காவல்துறையினா் தூத்துக்குடி சென்று 2 பேரையும் மீட்டனா். சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். போக்ஸோ சட்டத்தின்கீழ் ஜெகதீஷ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments