FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

திருச்சியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:28 am IST
கைது
பகிர்:

திருச்சியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கருமண்டபத்தைச் சோ்ந்த 11 வயது சிறுவன் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு இனாம்குளத்துரைச் சோ்ந்த முகமது இா்பான் (30) என்பவா் கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

இதுகுறித்து, சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இா்பானை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments