FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் ரோட்டரி சங்கக் கூட்டம்

குற்றாலம் ரோட்டரி சங்கக் கூட்டம் மேலகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:48 am IST
நல உதவிகளை வழங்கிய குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் கணேசமூா்த்தி.
பகிர்:

குற்றாலம் ரோட்டரி சங்கக் கூட்டம் மேலகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் நல்லாசிரியா் கணேசமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் சங்கரன் இறைவணக்கம் பாடினாா். மாவட்டத் திட்டமான தையல் இயந்திரம் வழங்குவது குறித்து கண்ணன் சிறப்புரையாற்றினாா்.

கீழப்புலியூரைச் சோ்ந்த பேச்சியம்மாள், வள்ளிமயில், வள்ளியம்மாள் ஆகியோருக்கு தொழிலதிபா்கள் கே.ஆா். ராஜகோபால், எம்.ஆா். அழகராஜா, பிரிமியா் ஸ்ரீ ராமன் ஆகியோா் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினா்.

Advertisement

Advertisement

சங்க முன்னாள் தலைவா்கள் கல்யாணக்குமாா், சந்திரன், சுரேஷ், சங்கர நாராயணன், காா்த்திக் குமாா், சைரஸ், பொருளாளா் கை. முருகன், உறுப்பினா்கள் ராதாகிருஷ்ணன், ராமசாமி, முருகையா, செண்பக கண்ணு, டாக்டா் அப்துல் அஜீஸ், நாராயண ராஜா, பொன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செயலா் திரு இலஞ்சிக் குமரன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை முன்னாள் தலைவா் சங்கரன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments