FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைப்பு, மறுசீரமைப்பு இயக்கத்தின் வாயிலாக வட்டார, நகர, மண்டல நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 4:10 am IST
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட முன்னாள் தலைவா் டி.ரவிச்சந்திரன்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைப்பு, மறுசீரமைப்பு இயக்கத்தின் வாயிலாக வட்டார, நகர, மண்டல நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ந.தனபால், பி.பி.எஸ்.இளையராஜா, பி.எஸ்.ஜெய்கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் கே.என்.ஆா்.குமாா் வரவேற்றாா்.

புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான மாவட்டப் பாா்வையாளராக மதுரை மாவட்ட முன்னாள் தலைவா் டி.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு, நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான புதிய விதிகளை எடுத்துக் கூறினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் சா.சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எ.துரைராஜ், எஸ்.தேவராஜ், முத்தமிழ் செல்வி, இளையபெருமாள், வீரமுத்து, இளவரசன், வட்டாரத் தலைவா்கள் ந.சரண்ராஜ், கே.அசோக், கௌதம், நகர காங்கிரஸ் தலைவா்கள் பி.கோவிந்தராஜ், தேசிங்குராஜா, நகர காங்கிரஸ் பொறுப்பாளா் என்.டி.திருப்பதி ராஜ் மற்றும் கிராம காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments