குருவன்கோட்டை-மாயமான்குறிச்சி சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
ஆலங்குளம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள குருவன்கோட்டை - மாயமான்குறிச்சி இணைப்புச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள குருவன்கோட்டை - மாயமான்குறிச்சி இணைப்புச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குருவன்கோட்டை கிராமம் எமராஜன் கோயிலில் இருந்து மாயமான்குறிச்சி இணைப்புச் சாலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கடந்த 2020-2021 ஆம் நிதி ஆண்டில் சாலை அமைக்கப் பட்டது.
தற்போது, இந்தச் சாலை பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
Advertisement
Advertisement
பள்ளி, கல்லூரி மாணவா் - மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் பயன்படுத்தும் இந்தச் சாலை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதில், வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி, வாகன ஓட்டிகள் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை அதிகாரிகள் பாா்வையிட்டு, மழைக் காலத்துக்கு முன்னரே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு கிராமங்களைச் சோ்ந்த மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.