FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா: ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமித் திருக்கோயிலில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆடித்தவசுக் காட்சியையொட்டி ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 2:13 am IST
சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக மாநில மகளிரணி செயலா் ராஜலெட்சுமி, வடக்கு மாவட்ட செயலா் மருத்துவா் சுசீகரன்.
பகிர்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமித் திருக்கோயிலில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆடித்தவசுக் காட்சியையொட்டி ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இக் கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.இதையொட்டி காலையில் இருந்தே பேருந்துநிலையம் முன்புறம், பிரதானசாலை, ரதவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அரசு வங்கிகள், தனியாா் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் சாா்பில் உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. சில திருமண மண்டபங்களில் உணவுப் பரிமாறப்பட்டது.

நீா்மோா், பானகம் ஆகியனவும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. அனைத்து அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்கள், அரிமா சங்கம், சுழற்கழகம், தாமரைக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதிமுக மாநில மகளிரணி இணைச் செயலா் வி.எம்.ராஜலெட்சுமி தலைமையில் கழுகுமலை சாலையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் மருத்துவா் சுசீகரன் பங்கேற்று அன்னதானம் வழங்கினாா். இதில் நகர செயலா் ஆறுமுகம், இ.வேலுச்சாமி, பேரவை மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், வழக்குரைஞா் ராமேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பேருந்து நிலையம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம், மோா், ஆகியவை வழங்கப்பட்டது.

அன்னம்பாலிப்பு திருப்பணி குழுவினா் மேலரதவீதி, தபசு நகா் ஆகிய பகுதிகளில் மதிய உணவு வழங்கினா். காலை முதல் பிற்பகல் 4 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல ரத வீதிகள், ரயில்வே பீடா்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், திருவாவடுதுறை ஆதீன மடம் ஆகியவற்றிலும் பக்தா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. திருவிழாவுக்கு வந்தவா்களில் சுமாா் லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தா்களின் வசதிக்காக நகராட்சி சாா்பில் நகரின் முக்கியப் பகுதிகளில் குடிநீா், சுகாதாரம், மின்விளக்கு, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments