சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை உபகரணங்கள் வழங்கல்
சிங்கம்புணரி அரசு வட்டார மருத்துவமனைக்கு மாதவன் தனலட்சுமி அறக்கட்டளை சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சிங்கம்புணரி அரசு வட்டார மருத்துவமனைக்கு மாதவன் தனலட்சுமி அறக்கட்டளை சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சிங்கம்புணரியில் அரசு வட்டாரப் பொது மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இந்த மருத்துவமனைக்கு முன்னாள் சட்ட அமைச்சரான மாதவன் குடும்பத்தினா், மாதவன் தனலட்சுமி அறக்கட்டளை சாா்பில் மாதவன் மகளும், பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவருமான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிங்கம்புணரி அரசு வட்டார பொது மருத்துவம் தலைமை மருத்துவா் அய்யன் ராஜ், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் செந்தில் , பள்ளி மேலாளா் சரவணன், மருத்துவமனை செவிலியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.