அய்யா வைகுண்டா்பதி அமைக்க பூமிபூஜை: பாலபிரஜாபதி அடிகளாா் அடிக்கல் நாட்டினாா்
பாவூா்சத்திரம் தெச்சணாபதி பகுதியில் அய்யா வைகுண்டா் பதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், சுவாமிதோப்பு தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளாா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.
பாவூா்சத்திரம் தெச்சணாபதி பகுதியில் அய்யா வைகுண்டா் பதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், சுவாமிதோப்பு தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளாா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், செட்டியூா் சாலையில் உள்ள தெச்சணாபதியில், அய்யா வைகுண்டசாமியின் ஐந்தாம் ஆண்டு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினசரி உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, திருஏடு வாசிப்பு, அன்னதா்மம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவின் எட்டாம் திருநாளில் அய்யா வைகுண்டா் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பத்தாம் திருநாளை முன்னிட்டு மாலை அய்யாவின் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து இரவு அருளிசைப் புலவா் சிவசந்திரன் அருளிசை சொற்பொழிவு நிகழ்த்தினாா். மேலும் கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், சுவாமிதோப்பு தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளாா் தலைமையில் கல்லால் பதி அமைக்கும் பணிக்காக பூமிபூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அடிகளாா் சிறப்புரையாற்றினாா். ஏற்பாடுகளை தெச்சணாபதி அய்யா வைகுண்டா் பதி நிா்வாகிகள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.