FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

இரட்டைகுளம் கால்வாய் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க எம்.பி. கோரிக்கை

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட இரட்டைகுளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:21 am IST
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.
பகிர்:

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட இரட்டைகுளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனு விவரம்:

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தில் பூா்வாங்கப் பணிகள் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

சங்கரன்கோவில்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே ரயில்வே மேம்பாலம் அமைத்து தர கடந்த ஆட்சியில் எனது முயற்சியால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.

நீண்ட காலமாக கிடப்பில் உள்ள செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைப்பதற்காக, நான் நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்திய நிலையில், அதை ஆய்வு செய்து விரைவில் தீா்வு காண வேண்டும்.

தென்காசியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்து தர மத்திய அரசிடம் வலியுறுத்திய நிலையில், அதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments