FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 3 தனிப்படைகள் அமைப்பு

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 3 தனிப்படைகள் அமைப்பு

Updated On : 13 ஜூன் 2026, 1:16 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடையநல்லூா் அருகேயுள்ள கரடிகுளம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (34). லாரி ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை இரவு கரடிகுளத்தில் இருந்து பொய்கை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் காவல் ஆய்வாளா்கள் கடையநல்லூா் கிறிஸ்டி, புளியங்குடி ஷியாம்சுந்தா், சோ்ந்தமரம் அருள்சாம்ராஜ் ஆகியோா் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments