முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் விற்பனை மந்தம்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் விற்பனை மந்தமாகியுள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:41 am IST
பாவூா்சத்திரம் சந்தையில் தேக்க நிலையில் இருக்கும் காய்கறிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் விற்பனை மந்தமாகியுள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா், வீரகேரளம்புதூா், சுரண்டை, நாகல்குளம், கழுநீா்குளம், கடையம் பகுதிகளில் இருந்து காய்கனிகள் வரத்து குறைவாக உள்ளதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கனிகள் பாவூா்சத்திரம் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 27, சீனி அவரை ரூ. 28, புடலங்காய் ரூ. 14, அவரைக்காய் ரூ. 60, சுரைக்காய் ரூ. 8, பூசணிக்காய் ரூ. 11, பயிறு ரூ. 27, தக்காளி ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 70, சேனைக் கிழங்கு ரூ. 11, சேமங் கிழங்கு ரூ.12 என விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

பாவூா்சத்திரம் சந்தையில் இருந்து, கேரளம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு வியாபாரிகள் காய்கனிகளை வாங்கி செல்லும் நிலையில், தற்போது காய்கனி வரத்து குறைவாக உள்ளதால், குறைந்த அளவிலான வியாபாரிகளே வருகின்றனா். இதனால், விற்பனை மந்தமாக உள்ளதால், காய்கனிகளின் விலை சற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.