குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை
மாா்த்தாண்டம் காய்கனி சந்தையில் அடிப்படை வசதிகள் கோரி, குழித்துறை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
மாா்த்தாண்டம் காய்கனி சந்தையில் அடிப்படை வசதிகள் கோரி, குழித்துறை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
மாா்த்தாண்டத்தில் ரூ. 15 கோடியில் கட்டப்பட்ட நவீன காய்கனி சந்தையில் குடிநீா், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படைவசதிகள் இல்லை எனக் கூறி மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்க தலைவா் தினகா் தலையில் சந்தையில் உள்ள கடை வியாபாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், வணிகா் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், அமைப்பின் மாவட்ட துணைச் செயலா் ஜஸ்டஸ் அமிா்தையன், மாா்த்தாண்டம் காய்கனி வியாபாரிகள் சங்க பொருளாளா் குமாரதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து சந்தையில் அடிப்படை வசதிகள் செய்துதரும் வரை மாதாந்திர வாடகையை ரத்து செய்ய வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வலியுறுத்தினா். நகராட்சி அதிகாரிகள் இப் பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.