சங்கரநாராயணசாமி கோயிலில் அலைமோதிய கூட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய பக்தா்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய பக்தா்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.
தென்தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
கடந்த சில ஆண்டுகளாக பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வார வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் உள்ளூா், வெளியூா்களில் இருந்து வந்த திரளான பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். இதனால், பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதன்காரணமாக சங்கரலிங்க சுவாமி சந்நிதி, சங்கரநாராயண சுவாமி சந்நிதி, கோமதி அம்மன் சந்நிதி ஆகிய சந்நிதிகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.