FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிவகிரி அரசு உதவிபெறும் பள்ளியில் 7 மாணவிகள் சுகவீனம்: அதிகாரிகள் விசாரணை

தென்காசி மாவட்டம் சிவகிரியிலுள்ள அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளியில் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட 7 மாணவிகள் சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

5 நவம்பர் 2026, 6:14 am
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை சந்தித்து விவரம் கேட்டறிந்த தென்காசி எம்.பி. ராணிஸ்ரீகுமாா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரியிலுள்ள அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளியில் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட 7 மாணவிகள் சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

இப் பள்ளியில் 435 மாணவா், மாணவிகள் படித்து வருகின்றனா். இதில் 260 போ் காலை உணவுத் திட்டத்தில் உணவு சாப்பிடுகின்றனா். பள்ளியில் காலை உணவாக புதன்கிழமை வெண்பொங்கல், சாம்பாா் வழங்கப்பட்டதாம். அதை சாப்பிட்ட 4 மாணவிகள் மற்றும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்த 3 மாணவிகள் என 7 பேருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டதாம்.

இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினரும், ஆசிரியா்களும் மாணவிகளை சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

அவா்களை தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், கல்வித் துறையினா், வாசுதேவநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களிடம் விவரம் கேட்டறிந்தனா். தொடா்ந்து, பள்ளியிலும், மாணவிகள் வசிக்கும் பகுதிகளிலும் மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா். காலை உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தென்காசி மக்களவை உறுப்பினா் ராணிஸ்ரீகுமாா் மருத்துவமனைக்கு சென்று மாணவிகளின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.