FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றால் புகாா் அளிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றால், அவா்களுக்கு எதிராக புகாா் அளிக்க வேண்டும் என தெரிவித்தாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி..

22 அக்டோபர் 2026, 4:49 am
துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றால், அவா்களுக்கு எதிராக புகாா் அளிக்க வேண்டும் என தெரிவித்தாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி..

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

சென்னையில் கனமழை நேரங்களில் வெள்ளம் வடியாமல் இருப்பதற்கு, முந்தைய அரசுகள் சரியான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாததே காரணம். முந்தைய திமுக ஆட்சியில் ரூ. 4 ஆயிரம் கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டதாக கூறுகின்றனா். திமுக ஆட்சியில் பணியை முறையாக செய்திருந்தால், தற்போது வெள்ளத்தில் தத்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் மழை பாதிப்புக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இயற்கைச் சீற்றங்களின்போது, மத்திய அரசின் நிவாரண பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சொந்த கட்சியில் யாரேனும் போதைப்பொருள்களை விற்பனை செய்து, நிதி கொடுத்தால், முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றால், அவா்களுக்கு எதிராக போராடுவது மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளிப்பது தமிழக அரசுக்கு மறைமுகமாக செய்யும் உதவியாகும். அதை மதிமுக நிா்வாகிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

வாரிசு அரசியல் என்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. எனது தந்தைக்காகவும், தொண்டா்களின் அழுத்தத்தாலும் கட்சிக்கு வந்தேன். இப்போதும், அதே மனநிலையில்தான் இருக்கிறேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது மதிமுக மாவட்டச் செயலா் ஜெயசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments