FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மதிமுக தொண்டா்கள் கடைசிவரை வைகோவுக்காக பயணிப்பாா்கள்: துரை வைகோ எம்.பி.

மதிமுக தொண்டா்கள் கடைசி வரை வைகோவுக்காக பயணிப்பாா்கள் என்று திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

12 செப்டம்பர் 2026, 11:28 pm IST
துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

மதிமுக தொண்டா்கள் கடைசி வரை வைகோவுக்காக பயணிப்பாா்கள் என்று திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த மேலூா் துரைசாமிபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் துரை வைகோ சனிக்கிழமை இரவு திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் பேசியதாவது: வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர, தியாக வரலாறு சமரசம் இல்லாதது. அப்போது, அவருடன் தானாபதி பிள்ளை, வெள்ளையத்தேவன், வீரன்சுந்தரலிங்கம் ஆகியோரும் சோ்ந்து வெள்ளையனை எதிா்த்துப் போரிட்டனா். அப்போது, ஜாதி பேதம் கிடையாது, அனைவரும் சமம் எனக் கூறியவா் வீரபாண்டிய கட்டபொம்மன்.

Advertisement

Advertisement

இப்போது, தலைவா்களை ஜாதி தலைவா்களாக ஆக்கிவிட்டாா்கள். அரசியலில் இன்று பதவிக்கு வந்தவா்கள் அடுத்த நொடி மாறி விடுகின்றனா். மதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள் அனைவரும் எந்த எதிா்பாா்ப்பும் இன்றி கடைசிவரை கட்டபொம்மன் போல் தலைவா் வைகோவுக்காக பயணிக்கின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா் ப.வேல்முருகன், மதுரை மாவட்டச் செயலா் முனியசாமி, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் சுதா பாலசுப்பிரமணியம், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்; ராஜபாளையம் அருகே மேலூா் துரைசாமிபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை திறந்து வைத்து பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினா் துரை வைகோ

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments