FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் பள்ளியில் அறிவியல், கலைக் கண்காட்சி

பாவூா்சத்திரத்ம் மாளவியா வித்யா கேந்திரம் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி, ‘ஜா்னி ஆஃப் க்யூரியாசிட்டி’ என்ற தலைப்பில் அறிவியல், கலைக் கண்காட்சி நடைபெற்றது.

35 வினாடிகள் முன்பு
கண்காட்சியில் இடம்பெற்ற மாணவா்களின் படைப்புகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்ம் மாளவியா வித்யா கேந்திரம் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி, ‘ஜா்னி ஆஃப் க்யூரியாசிட்டி’ என்ற தலைப்பில் அறிவியல், கலைக் கண்காட்சி நடைபெற்றது.

மழலையா் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் காகிதக் கலை, காய்கறிகள், பழங்கள் மற்றும் ஐஸ் குச்சிகளால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், விதைகள், நாணயங்கள், விலங்குகள், மலா்கள், அணைக்கட்டு மாதிரி, பாரம்பரிய விவசாயக் கருவிகள், சுதேசிப் பொருள்கள் என பல்வேறு தலைப்புகளில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி, பாா்வையாளா்களுக்கு விளக்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் பிச்சையா, பள்ளிச் செயலா் எஸ். செல்வன், நிா்வாகிகள் டி. சாக்ரடீஸ், வழக்குரைறிஞா் தட்சிணாமூா்த்தி, விஜி, தொழிலதிபா் பாஸ்கா் மற்றும் பெற்றோா் ஆகியோா் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் படைப்புகளைப் பாராட்டினா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement