கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கரிவலம்வந்தநல்லூா் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவா், புதன்கிழமை காலை தனது விவசாய நிலத்துக்குச்சென்றபோது, கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைக் கண்டாா்.
இதுகுறித்து அவா், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்ததன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வன் தலைமையில் நிலைய அலுவலா் (போக்குவரத்து) செல்வமுருகேசன் உள்பட தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு புளியங்குடி வனச்சரகா் மணிகண்டனிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement