முகப்பு
தென்காசி

காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பு ரயிலுக்கு தென்காசியில் வரவேற்பு

காா்த்திகை தீபத் திருவிழாவை செங்கோட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்னிட்டு முதன் முறையாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு தென்காசியில் ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

6 வினாடிகள் முன்பு
காா்த்திகை தீபத் திருவிழா 
சிறப்பு ரயிலுக்கு தென்காசியில் வரவேற்பு
சிறப்பு ரயிலுக்கு வரவேற்பளித்த தென்காசி ரயில்பயணிகள் நலச்சங்கத்தினா்.
பகிர்:

காா்த்திகை தீபத் திருவிழாவை செங்கோட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்னிட்டு முதன் முறையாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு தென்காசியில் ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

அச்சங்கத் தலைவா் என். வெங்கடேஸ்வரன் தலைமையில் ரயில் என்ஜின் ஆபரேட்டா்களுக்கு சால்வை அணிவித்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரயில்வே பயணிகள் கூட்டமைப்பு சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியன், தென்காசி ரயில்வே பயணிகள் நலச் சங்க செயலா் மசூது அலி, கோமதி சந்திரசேகா், மாரியப்பன், ரெங்கராஜ், வேலுச்சாமி, வாசு, திமுக அயலக அணி துணை அமைப்பாளா்கள் ராமராஜ், நசீா், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் குற்றாலம் ரங்கசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆண்டுதோறும் திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.