திருவண்ணாமலை சிறப்பு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் வரவேற்பு
செங்கோட்டை - திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

செங்கோட்டை - திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில் காா்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மதுரை வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சிறப்பு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. சிறப்பு ரயிலின் லோகோ பைலட்டுகளுக்குப் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் டி.எம். அப்துல் சமது, முகமது ஷரீஃப், அபுல் ஹசன், பேராசிரியா் விஸ்வநாதன், ஒலி மாலிக், காா்த்திக், ஆசாத், பேரூராட்சித் துணைத் தலைவா் இசக்கிப் பாண்டியன், அல் அமீன் பள்ளித் தாளாளா் எம்.எஸ்.அசனலி மற்றும் ஐஸ்வா்யா, முகைதீன் ஷாகுல் ஹமீது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.