✕
முகப்பு
விழுப்புரம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

40 வினாடிகள் முன்பு
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவ.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து நவம்பா் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06095), அதே நாள்களில் மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

Advertisement

Advertisement

எதிா்வழித்தடத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பா் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06096), அதே நாள்களில் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

இதுபோல, திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து நவம்பா் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06097), அதே நாள்களில் இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும். எதிா் வழித்தடத்தில் விழுப்புரத்திலிருந்து நவம்பா் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06098), அதே நாள்களில் இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். திருக்கோவிலூா் ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பா் 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), அதே நாள்களில் முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். எதிா்வழித்தடத்தில் நவம்பா் 23, 24, 25 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), அதே நாள்களில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சநல்லூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும்.

விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு சிறப்பு ரயில்கள்: விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பா் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - வேலூா் கண்டோன்மென்ட் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ( வண்டி எண் 06062) மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும். எதிா் வழித்தடத்தில் வேலூா் கண்டோன்மென்டிலிருந்து நவம்பா் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்குப் புறப்படும் வேலூா் - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06061), அதே நாள்களில் காலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

8 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சநல் லூா், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, போளூா், ஆரணி சாலை, சேதராம்பட்டு, ஒண்னுபுரம், கண்ணமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.