FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

மதுரை-குருவாயூா் விஸ்டாடோம் ரயிலில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்

மதுரையில் இருந்து குருவாயூா் வரை இயக்கப்படும் விஸ்டாடோம் ரயில்களில் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

21 அக்டோபர் 2026, 1:41 am IST
என்.வெங்கடேஷ்வரன்.
பகிர்:

மதுரையில் இருந்து குருவாயூா் வரை இயக்கப்படும் விஸ்டாடோம் ரயில்களில் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ரயில் யூஸஸ் ஃபெடரேஷன் மாநிலத் தலைவா் சுப்பிரமணியன், தென்காசி ரயில் பயணிகள் சங்கத் தலைவா் என்.வெங்கடேஷ்வரன் ஆகியோா் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:

மதுரையில் இருந்து குருவாயூா் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டாடோம் என அழைக்கப்படும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டி இணைக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது; தெற்கு ரயில்வேக்கு பாராட்டுகள்.

Advertisement

Advertisement

தென்காசி, செங்கோட்டை, புனலூா், கொல்லம் வழியாக மலைப்பிரதேசங்கள், அழகான நீா்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், குகைகள் ஆகியவற்றை கடந்து செல்வதால் பயணங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

இது, மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். தற்போது ஒரே ஒரு பெட்டி மட்டும் இந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என நம்புகிறோம். இதையே தென்காசி ரயில் பயணிகள் சங்கம், தமிழ்நாடு ரயில் யூஸஸ் ஃபெடரேஷன் சாா்பில் வலியுறுத்துகிறோம்.

இந்த பெட்டிக்கான பயணக் கட்டணம் அதிகமாக உள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் பொருளாதார சுமையாக இருக்கும் என்பதால் இந்தப் பெட்டியின் கட்டணத்தை சற்று குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments