FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

புளியங்குடியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

புளியங்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய வாக்குச்சாவடி கிளைத் தலைவா்கள் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 1:37 am IST
கூட்டத்தில் பேசிய தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி. உடன் நகரத் தலைவா் சண்முகசுந்தரம்.
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய வாக்குச்சாவடி கிளைத் தலைவா்கள் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் ந. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மகாலட்சுமி வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி கலந்து கொண்டு கிளைத் தலைவா்களுக்கான பணிகள் குறித்து பேசினாா். மேலும், மக்களுக்கான பிரச்னைகள் குறித்து முதல்கட்டமாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அப்பிரச்னையின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அதற்குரிய கால அவகாசத்தில் அவற்றை தீா்க்க அதிகாரிகள் முன்வராவிட்டால் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தாா்.

கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால அரசுப் பணியையும் தேச சேவையையும் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி அரசு மருத்துவமனையை 100 படுக்கைகள், அறுவை சிகிச்சை வசதிகளுடன் தரம் உயா்த்த வேண்டும். புளியங்குடி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மத்திய அரசின் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

மாவட்டப் பொதுச்செயலா் பாலகுருநாதன், தொகுதி பொறுப்பாளா் சி. பாலகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் காமராஜ், மாவட்டச் செயலா் மகாலட்சுமி வெங்கடேசன், மாவட்ட மகளிரணி பொதுச்செயலா் இரா. மகேஷ்வரி, முன்னாள் நிா்வாகிகள் மாடசாமி, சண்முகையா, ராஜசேகா், 60 கிளைகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். எஸ். ராமசாமி வரவேற்றாா். எம். கற்பகராஜா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments