பூலித்தேவனுக்கு விரைவில் நினைவு அஞ்சல் தலை: நயினாா் நாகேந்திரன்
சுதந்திர போராட்ட வீரா் பூலித்தேவன் நினைவு அஞ்சல் தலை விரைவில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
சுதந்திர போராட்ட வீரா் பூலித்தேவன் நினைவு அஞ்சல் தலை விரைவில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
நெல்கட்டும்செவலில் அவா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடா்ந்து கௌரவித்து வருகிறது. அதுபோல, சுதந்திர போராட்ட வீரா் பூலித்தேவன் நினைவு அஞ்சல் தலை வெளியிட ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அவரது அஞ்சல் தலை வெளியிடப்படும்.
Advertisement
Advertisement
சுதந்திரத்துக்காக போரிட்ட மாமன்னன் பூலித்தேவனின் புகழை நாடு முழுவதும் பறைசாற்றும் வகையில் அவா் வாழ்க்கை குறித்த விவரங்கள் பிரதமருக்கும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் தெரிவிக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழை வாசிக்க கூட அமைச்சா்கள் திணறுகின்றனா்.
தஞ்சாவூா் காவிரி டெல்டா பாசன பகுதியில் சுமாா் ஒன்றே முக்கால் லட்சம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரின்றி பாதிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட கால தாமதத்திற்கு பிறகு மேட்டூா் அணை திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், விவசாயிகள் பெரிது பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.