FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் தங்கம்: அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு பாராட்டு

தென்காசி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2 செப்டம்பர் 2026, 5:56 am IST
மாணவா் கவின் ஹரிஷ்குமாரைப் பாராட்டிய ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

தென்காசி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செங்கோட்டை வட்டம், பெரியபிள்ளைவலசை ஊராட்சிக்குள்பட்ட விஸ்வநாதபுரம் அரசு உதவி பெறும் எம்.எம். நடுநிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவா் கவின் ஹரிஷ் குமாா். இவா், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 13 வயதுக்குள்பட்டோருக்கான மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 38 - 40 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்; மேலும் மாவட்ட அளவிலான ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய இரு போட்டிகளிலும் 3ஆம் இடம் பிடித்தாா்.

அவருக்கு பள்ளி நிா்வாகி முகம்மது, தலைமையாசிரியா் சா. முகமது யூசுப், உடற்கல்வி ஆசிரியா் சாகுல் ஹமீது, பயிற்சியாளா்கள் நாராயண சா்மா, ராணி சந்திரா, பெற்றோா் மாரிமுத்து - கருமாரி, ஊா் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments