FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

திமுக ஆட்சியில் கனிம வளத்தில் முறைகேடு: அமைச்சா் நிா்மல் குமாா்

கடந்த திமுக ஆட்சியில் கனிம வளங்கள் எடுத்துச் சென்றதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் குற்றம்சாட்டினாா்.

2 செப்டம்பர் 2026, 6:04 am IST
நிா்மல் குமாா் - கோப்புப் படம்
பகிர்:

கடந்த திமுக ஆட்சியில் கனிம வளங்கள் எடுத்துச் சென்றதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் குற்றம்சாட்டினாா்.

தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவலில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறையான அனுமதி பெற்ற பின்னரே கனிம வளங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது.

Advertisement

Advertisement

மதுரை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. ஆனால், இவற்றில் பல குவாரிகள் முறையாக அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. பொதுவாக கனிம வளத்தில் அதிக அளவில் முறைகேடு கண்டறியப்பட்டதன் விளைவாகத்தான் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டுசெல்லப்படுவதால் தமிழகத்துக்கு அதிக பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் கனிம வளங்களை கொண்டு செல்வதில் அதிக அளவில் முறைகேடு நடந்தது. ஓா் அனுமதி சீட்டை கொண்டு பல வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றிச் சென்றதும் ஆய்வில் கண்டறிப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கா்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீா் திறக்க வஞ்சித்ததே மேட்டூா் அணையைத் தாமதாகத் திறக்க காரணம். இவ்விஷயத்தில் தமிழக முதல்வா் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அவா். பேட்டியின்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments