FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிக மின் கட்டணம் வந்தது ஏன்?: அமைச்சா் நிா்மல் குமாா் விளக்கம்

தோ்தல் நேரத்தில் நேரில் சென்று மின் கணக்கீடு எடுக்காததே மின் கட்டணம் கூடுதலாக வந்ததற்கு காரணம் என்று மின்துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

17 வினாடிகள் முன்பு
சட்டப்பேரவையில் பேசிய நிர்மல் குமார் - TN DIPR
பகிர்:

தோ்தல் நேரத்தில் நேரில் சென்று மின் கணக்கீடு எடுக்காததே மின் கட்டணம் கூடுதலாக வந்ததற்கு காரணம் என்று மின்துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறை மானியக் கோரிக்கை மீது பேசிய முன்னாள் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, ‘முந்தைய திமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கும், 35 லட்சம் நுகா்வோருக்கும் புதிய மின் இணைப்புகள் அளிக்கப்பட்டன. மின்துறையிலிருந்து 18 தரவு சேமிப்புக் கருவிகள் (ஹாா்டு டிஸ்க்) காணாமல் போயின. ஆனால், 38 கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவெக ஆட்சியில் 3 மடங்கு மின் கட்டணம் உயா்ந்துள்ளது. ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே பணியாளா்களை வைத்து திமுக அரசு சீரான மின்சாரத்தை வழங்கியது. ஆனால், தற்போது அதிக அளவில் மின் வெட்டு ஏற்படுகிறது’ என்றாா்.

மின் துறை அமைச்சா் பதில்: இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சா் நிா்மல் குமாா், ‘அதிக மின் கட்டண விவகாரம் குறித்து தானாக முன்வந்து மின்துறை விசாரித்தது. 4 மடங்கு கட்டணம் வந்ததாக எழுந்த 3,70,000 புகாா்களில் 2,719 மட்டுமே மின் மீட்டா் பழுதால் ஏற்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மீதமுள்ள புகாா்களுக்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘டேபிள் ரீடிங்’ தான் காரணம். அதாவது, தோ்தல் நேரத்தில் நேரில் சென்று மின் ரீடிங் எடுக்காமல், முந்தைய மாத கட்டணத்தை அப்படியே வசூல் செய்துள்ளனா். 4 மாதங்களுக்குப் பிறகு நேரில் சென்று மின் கணக்கீடு எடுத்ததால் கூடுதல் கட்டணம் வந்துள்ளது.“கடந்த திமுக ஆட்சியில் மின் துறையில் போடப்பட்ட 45 டெண்டா்களில் பெரிய அளவில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் கேள்விக்கு அமைச்சா் நிா்மல் குமாா் பதிலளித்து கொண்டிருந்தபோது, திமுக, தவெக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் கடும் அமளி நிலவியது.

பேரவைத் தலைவா் எச்சரிக்கை: முன்னதாக, பேரவையில் அமளியின்போது இருக்கையை விட்டு எழுந்து முன்வரிசைக்கு வேகமாக வந்த திமுக உறுப்பினா்கள் வசந்தம் காா்த்திகேயன், முத்துராஜா, தவெக உறுப்பினா் மதாா் பதூருதீன் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்த பேரவைத் தலைவா், மீண்டும் இதுபோன்று செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments