குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மேற்பார்வையாளர் ஒன்றியக் கூட்டம்
தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஒன்றியக் கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஒன்றியக் கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் சு. அருணாசலம், துணைத் தலைவர் மா. சண்முகமூர்த்தி, மகளிரணிச் செயலர் தேவிகா, இணைச் செயலர் செல்வா, அ. மீனாட்சி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவராக பி. சாந்தி, செயலராக எஸ். காந்திமதி, பொருளாளராக எஸ். சந்திரா, துணைத் தலைவர்களாக எஸ். சங்கரம்மாள், எஸ். சாரதா, ஏ. உலகம்மாள் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் வளர்ச்சித் திட்ட அலுவலர்களை அரசு விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட தூண்டும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விரைவில் போராட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.