FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெல்லை காய்கனி சந்தைகளில் பச்சைமிளகாய் விலை உயர்வு

திருநெல்வேலி மாவட்ட காய்கனி சந்தைகளில் பச்சை மிளகாயின் விலை ஞாயிற்றுக்கிழமை உயர்ந்தது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட காய்கனி சந்தைகளில் பச்சை மிளகாயின் விலை ஞாயிற்றுக்கிழமை உயர்ந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இங்கிலீஷ் காய்கனிகள் எனப்படும் கேரட், பீட்ரூட் உள்ளிட்டவற்றின் விலை கடந்த இருவாரங்களாக உயர்ந்தது. இந்நிலையில், நிகழ் வாரத்தில் பச்சைமிளகாய் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.46-க்கு விற்பனையான பச்சைமிளகாய் ஞாயிற்றுக்கிழமை ரூ.56-க்கு விற்பனையானது. இதேபோல பாகற்காய், கேரட் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.
திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (ஒரு கிலோவுக்கு): கத்தரி-ரூ.24, வெண்டைக்காய்-24, தக்காளி-14, அவரைக்காய்-40, கொத்தவரை-24, புடலங்காய்-20, பாகற்காய்-40, பீர்க்கங்காய்-20, சுரைக்காய்-10, தடியங்காய்-15, பூசணிக்காய்-15, தேங்காய்-38, மாங்காய்-30, மிளகாய்-56, பல்லாரி-ரூ.24, சின்னவெங்காயம்-ரூ.40, முள்ளங்கி-16, எலுமிச்சை-30, நார்த்தை-24, தண்டுகீரை-10, அரைக்கீரை-10, குத்துப்பசலைகீரை-10, மணத்தக்காளிகீரை-20, கொத்தமல்லி கீரை-25, கேரட்-56, பீட்ரூட்-30, உருளைக்கிழங்கு-26, செளசெள-18, ரிங் பீன்ஸ்-58, இஞ்சி-95, நெல்லிக்காய்-30, வாழைப்பழம்-70, மாம்பழம்-60, பப்பாளி-80.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments