ஓய்வூதியர் நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் ஓய்வூதியர் நலவாரியம் அமைக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட அரசு பென்சனர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஓய்வூதியர் நலவாரியம் அமைக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட அரசு பென்சனர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அரசு பென்சனர்கள் சங்கத்தின் 61ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற துணை ஆட்சியருமான கு.முத்துசுவாமி தலைமை வகித்தார். செயலர் சு.அப்பனசாமி வரவேற்றார். துணைத் தலைவர் க.சங்கரபாண்டியன், பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.
ஐஐபிஇ லட்சுமிராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் செயலர் எஸ்.ஆர்.அனந்தராமன் ஓய்வூதியப் பலன் விளக்க குறிப்பேட்டை வெளியிட்டார். இன்றைய சூழலில் மனஅமைதிக்கு வழி என்ற தலைப்பில் மருத்துவர் எம்.ஜி.ஓஸ்.குமரகுருவும், முதுமையில் சித்த மருத்துவம் என்ற தலைப்பில் மூ.முருகேசனும் சொற்பொழிவாற்றினர். நிர்வாகிகள் பி.டி.சிதம்பரம், பி.கதிர்வேல் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழுவை 1-1-2016 முதல் அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் அதேபோன்ற பணப்பலன் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
முழு ஓய்வூதியம் பெற சேவைக் காலத்தை 20 ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும். மருத்துவப் படியை ரூ.1000 ஆக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் ஓய்வூதியர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.