தூய சவேரியார் கல்லூரியில் வீரமாமுனிவர் தமிழ் மன்றம் தொடக்கம்
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளநிலைப் பொதுத் தமிழ் மாணவர்களுக்கான வீரமாமுனிவர் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளநிலைப் பொதுத் தமிழ் மாணவர்களுக்கான வீரமாமுனிவர் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது.
இவ்விழாவில், பேராசிரியர் இருதயராஜ் வரவேற்றார். தமிழ்த் துறை தலைவர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்திப் பேசினார். இளைஞர்களை தலைவர்களாக்குவது கல்லூரியா? சமுதாயமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பொ.செ.பாண்டியன் மன்றத்தைத் தொடங்கி வைத்து பட்டிமன்ற நடுவராக செயல்பட்டார். கல்லூரியே என்ற அணியில் பேராசிரியர்கள் ஜனார்த்தனன், பிரின்ஸி, மாணவர் அந்தோணிராஜ் ஆகியோர் பேசினர். சமுதாயமே என்ற அணியில் பேராசிரியர்கள் அந்தோணிராஜ், ஜோக்கிம், மாணவர் அடைக்கலராஜ் ஆகியோர் பேசினர். இறுதியில் பேராசிரியர் சு.ரவிஜேசுராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அனுஜா தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் அந்தோணிராஜ் செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.