FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூய யோவான் கல்லூரியில் தொழில்முனைதல் விளக்க முகாம்

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில்முனைதல் குறித்த விழிப்புணர்வு முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில்முனைதல் குறித்த விழிப்புணர்வு முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.
கல்லூரியின் சுயநிதி வணிகவியல்துறை மற்றும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் நிதியுதவியுடன் நடைபெற்ற இம்முகாமை, கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி தலைமை வகித்து, தொடங்கிவைத்தார்.
இதில், மாவட்ட தொழில் மையம், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், வங்கி மேலாளர்கள், முதன்மை தொழிலதிபர்கள் பங்கேற்று தொழில் முனைதல் குறித்துப் பேசினர். கல்லூரி துணை முதல்வர் ஜவஹர் சாமுவேல், வணிகவியல்துறைத் தலைவர் ஜேனிஸ் பிபியானா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முகாம் நிறைவில் கங்கைகொண்டான் சிப்காட், தனியார் கார்பன் நிறுவனங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு  தொழில்முனைதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments