பக்ரீத்: குர்பானிக்காக உபகரணங்கள் அளிப்பு
பக்ரீத் பண்டிகைக்காக ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்கும்போது,, சுகாதாரத்தைப் பேணும் வகையில், மேலப்பாளையத்தில்
பக்ரீத் பண்டிகைக்காக ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்கும்போது,, சுகாதாரத்தைப் பேணும் வகையில், மேலப்பாளையத்தில் மக்களுக்கு துணிப் பைகள், விரிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இதையொட்டி, மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம்களுக்கு துணி விரிப்பு, பைகள் மற்றும் கிருமி நாசினி பவுடர் போன்றவற்றை மாநகராட்சி நகர்நல அலுவலர் சத்தீஸ்குமார் வழங்கினார். உதவி ஆணையர் கவிதா, சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, உதவிச் செயற்பொறியாளர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மேலப்பாளையம் பகுதியில் மக்களிடம் இருந்து குர்பானி கழிவுகளைச் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.