FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அர்ச்சகர்கள் பற்றாக்குறை: பாபநாசம் கோயிலிலில் ஒரே நேரத்தில் திருமணத்துக்கு வந்த மணமக்கள் தவிப்பு

பாபநாசம் சிவன் கோயிலிலில் அர்ச்சகர்கள் பற்றாக்குறையால் ஒரே நேரத்தில் திருமணத்துக்கு வந்த மணமக்கள் தவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. 

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

பாபநாசம் சிவன் கோயிலிலில் அர்ச்சகர்கள் பற்றாக்குறையால் ஒரே நேரத்தில் திருமணத்துக்கு வந்த மணமக்கள் தவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. 
இக்கோயிலில் முகூர்த்த நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதுண்டு. இந்நிலையில் புதன்கிழமை இக்கோயிலில் 10-க்கும் மேற்பட்ட மணமக்கள் திருமணத்துக்கு பதிவு செய்திருந்தனராம். மேலும் அனைத்து திருமணமும் ஒரே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாம். 
இதற்கிடையே கோயிலில் அர்ச்சகர்கள் பற்றாக்குறையால் மணமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நல்ல நேரம் முடிய 15 நிமிடங்கள் இருந்த நிலையில் காத்திருந்த மணமக்களின் உறவினர்கள் அங்கு இருந்த ஒரே அர்ச்சகரை அனைவரும் தங்களுக்கு வரும்படி அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலர் அர்ச்சகரை தங்கள் தோள்களில் தூக்கி அழைத்துச் சென்றனர். 
இக்கோயிலில் போதிய அளவில் அர்ச்சகர்கள் இல்லாததால் தான் இது போன்ற பிரச்னை எழுகிறது. எனவே, இந்து சமய அறநிலையத் துறை இக்கோயிலில் கூடுதல் அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணமக்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments