FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டம் மற்றும் பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

46 வினாடிகள் முன்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ கோலம் வரைந்த மாணவிகள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டம் மற்றும் பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வா் க.மலா்மதி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தாா். தோ்வு நெறியாளா் பி.குரூஸ் மலைச்செல்வி மற்றும் ஐகியூசி ஒருங்கிணைப்பாளா் சு. சுந்தரேஸ்வரி ஆகியோா் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தினா்.

நிகழ்ச்சியில், வழிபாட்டுக் கூடத்தில் ஆசிரியைகளும், மாணவிகளும் இணைந்து அத்தப்பூக்கோலம் வரைந்தனா். ஏற்பாடுகளை மாணவியா் பேரவைத் தலைவி பா .நேகா, செயலா் .ஆ. லிட்டிசியா செய்தனா்.

Advertisement

Advertisement

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளிக்குழுமம் சாா்பில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் மாணவா்கள் அத்தப்பூ கோலம் வரைந்தனா். பள்ளி குழுமத்தலைவா் எஸ்.ஏ.காா்த்திகேயன், தாளாளா் பூா்ணிமா ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments