மேலப்பாளையத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், மேலப்பாளையம் சந்தைமுக்கு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அலிப் பிலால் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் ஜமால், பொருளாளர் சுல்தான், மாவட்ட துணைத் தலைவர் ஏர்வாடி முகைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ப.அப்துல் சமது, துணை பொதுச் செயலர் முகமது கவுஸ், மாநிலச் செயலர் எஸ்.மைதீன் சேட்கான், கிழக்கு மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன், மேற்கு மாவட்டத் தலைவர் நயினார் முகமது ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மனிதநேய மக்கள் கட்சியின் ஊடகப் பிரிவு நிர்வாகி ஜாபர், தமுமுக இளைஞரணி மாவட்டச் செயலர் யூசுப் சுல்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.