டாஸ்மாக் கடையை மூடக் கோரி எம்எல்ஏவிடம் மனு
சிவகிரி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 கிராம மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சிவகிரி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 கிராம மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வடுகபட்டி-தெற்குசத்திரம் பகுதியில் அக். 18ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி வடுகபட்டி, தெற்குசத்திரம், வடக்கு சத்திரம் கிராம மக்கள் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். 7ஆவது நாளாக ஞாயிற்றுக் கிழமை (டிச. 30), கிராம மக்கள் மது பாட்டில்களை தூக்கில் தொங்க விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டக் குழுவைச் சேர்ந்த 9 பேர், அ. மனோகரன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய முடிவெடுப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.